நெல்லை அறிவியல் மையத்தில் 6ம் தேதி பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விண்வெளி வார ஓவியப்போட்டி தகுதியானோர் பங்ேகற்கலாம்

2 months ago 14

தியாகராஜநகர், அக். 4: நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உலக விண்வெளி வாரம்- 2024 கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மறுதினம் (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி ‘எதிர்கால விண்கலம்’ (Future Spacecraft) என்ற தலைப்பில் காலை 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாணவ -மாணவிகள் அன்று நேரில் பங்கு கொள்ளலாம். ஏ 4 அளவு வரைபடத்தாள் மட்டும் அறிவியல் மையத்தில் வழங்கப்படும். தேவையான பிற பொருட்களை பங்கு பெறுபவர்கள் கொண்டு வர வேண்டும். சிறந்த ஓவியங்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய [email protected] < mailto: [email protected] > என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94429 94797 whatsapp எண்ணையோ அணுகலாம் என அறிவியல் மைய அலுவலர் எஸ் எம் குமார் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை அறிவியல் மையத்தில் 6ம் தேதி பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விண்வெளி வார ஓவியப்போட்டி தகுதியானோர் பங்ேகற்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article