நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய சம்பவத்தில் மூன்று பேர் கைது

2 months ago 11

நெல்லை: நெல்லை அருகே சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கிய வழக்கில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி அருகே மேலப்பாட்டத்தில் நேற்று (நவ.4) ஒரு கும்பல் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலப்பாட்டம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அச்சிறுவன் நேற்று இரவில் வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் திடீரென்று புகுந்த அந்த கும்பல் சிறுவனின் காலில் அரிவாளால் வெட்டிவிட்டு, பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கிவிட்டு தப்பி ஒடினர்.

Read Entire Article