நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் போட்டி

3 months ago 21

 

பந்தலூர், அக்.2 : நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அறிவழகன் வரவேற்று பேசினார். நகர்மன்ற கவுன்சிலர் ஜாபீர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நவமணி, நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம், சமூக பணியாளர்கள் அஜீத், ரவீந்திரன், சுரேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article