ராஜபாளையம், மே 25: ராஜபாளையம் அருகே நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில் 26வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டிகு நகரச் செயலாளர் அய்யனன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் முன்னாள் எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான ராமசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளருமான லிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில் தளவாய்புரம் செட்டியார்பட்டி வழியாக புதிய வழித்தடத்தை உருவாக்கி போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விசைத்தறி கைத்தறி ஆயத்த ஆடை, நவீன ரைஸ் மில் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பலப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையம் அருகே இ.கம்யூ ஒன்றிய மாநாடு: தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.