நெட்வொர்க் செயலிழப்பு ஏன்? ஏர்டெல் நிர்வாகம் விளக்கம்

2 days ago 2

சென்னை,

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நேற்று மாலை பரவலான நெட்வொர்க் இடையூறுகளை சந்தித்தது. இதனால் சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.

மொபைல் டேட்டா சேவைகள் மெதுவாக செயல்படுவதாகவும், அழைப்புகள் திடீரென துண்டிக்கப்படுவதாகவும் சில பயன்ரகள் கூறுகிறார்கள். நெட்வொர்க் கவரேஜ் இல்லாதது, வோல்டேஜ் சிக்கல்கள் குறித்து பலர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், விரக்தியடைந்த பயனர்கள் சமூக ஊடக தளங்களில் புகார்களைப் பதிவிட்டுள்ளனர். பலர் ஏர்டெலை விமர்சித்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நெட்வொர்க் தொடர்பான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏர்டெல் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏர்டெல் தற்போது தற்காலிக நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்து வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து, சேவைகளை விரைவாக மீட்டெடுக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article