நெட் தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

1 day ago 4

சென்னை: நடப்பாண்டு ஜூன் பருவ நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு வரும் ஜூன் 21 முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 12) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 13ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து விண்ணப்பங்களில் மாணவர்கள் மே 14, 15ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெட் தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் appeared first on Dinakaran.

Read Entire Article