திருத்துறைப்பூண்டி, மே 13: திருத்துறைப்பூண்டி அருகே உளள கீராலத்தூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. டாக்டர் சந்திரன் தலைமை மருத்துவ குழுவினர் 300 ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த வைரஸ் நோய் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை பாதிக்கக்கூடியது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஒரு வாரத்தில் இறக்கும் வாய்ப்புள்ளது.. முகாம் தொடர்ந்து நடைபெறுகிறது. விவசாயிகள் ஆடு வளர்ப்போர் இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு பொருளதார இழப்பை சரி செய்துகொள்ள வேண்டும் என்றார்.
The post கீராலத்தூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.