மன்னார்குடி, மே 13: திருவாரூர் மாவட்டத்தில் 4,71,200 பேருக்கு வாய்புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் தொடங்கி உள்ளது. மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி குட்டக்கரை நகர்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்பப்பை வாய்புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் திட்டம் முகாமை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சில் கலெக்டர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியது, தமிழக அரசால், தமிழகத்தில் உள்ள நல வாழ்வு மையங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்பப்பை வாய்புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா, நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகர திமுக செயலாளர் வீரா கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இலக்கியா மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்வி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்னார்குடியில் அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார்
The post திருவாரூர் மாவட்டத்தில் 4,71,200 பேருக்கு வாய்புற்று நோய் கண்டறியும் பரிசோதனை appeared first on Dinakaran.