நெடுகுளா வட்டார அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

3 months ago 19

கோத்தகிரி: கோத்தகிரி அருகே நெடுகுளா வட்டார அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. கோத்தகிரி அருகே நெடுகுளா அரசு வட்டார மருத்துவமனை சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட நிரந்தர முடக்கத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகள் மருத்துவ தேவைகள், மருந்து உபகரணங்கள் வாங்க முடியாமல் உள்ளவர்களுக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் இந்த மாத தேவைக்கு வழங்கப்பட்டது. இந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஆ.ராசா மக்கள் சேவை மையம் கீழ் கோத்தகிரி சண்முக நாதன் ஒருங்கிணைப்பில் வட்டார மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவி ஏற்பாடுகளை தனியார் மருத்துவமனை மருத்துவர் மகேஷ்வரன் செய்திருந்தார்.

The post நெடுகுளா வட்டார அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா மக்கள் சேவை மையம் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article