நூலக வாசகர் வட்ட கூட்டம்

3 months ago 28

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில், வாசகர் வட்ட தலைவர் க.வேதாசலம் தலைமை தாங்கினார். கிளை நூலகர் சி.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் ஜெய் மனோகர், இமயவரம்பன் சுயம்புலிங்கம், ஜெய்சங்கர், நூலகர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது இந்த நூலகத்திற்கு வாசகர் வருகையை அதிகரிக்க உறுப்பினர் சேர்க்கை மற்றும் புரவலர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். இந்த நூலக கட்டிடத்தை பராமரிக்க நிதி ஒதுக்கிய மாவட்ட நூலக அலுவலருக்கு நன்றி தெரிவித்தல், மேலும், வாசகர் வட்டத்தின் மூலமாக இந்த நூலகத்திற்கு தேவையானவற்றை கேட்டுப் பெறுதல், தினக்கூலி அடிப்படையில் பணியாளர் மற்றும் துப்புரவாளர் ஒருவர் நூலகத்திற்கு நியமிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நூலக வாசகர் வட்ட கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article