புதுடெல்லி: “மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்,” என்று புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது.