சென்னை: சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு நிதி வேண்டும் என்றால் வரியை உயர்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி அரசு போட்ட கையெழுத்தால் கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு, என்று எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது” என வழக்கம் போலவே ‘பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார்.