நீலகிரி வயநாடு அருகே காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய தம்பதியர்

2 hours ago 2

 

கூடலூர், ஜன.21: வயநாடு அருகே காட்டி குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளை வழி மறித்து வந்தது. யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் தம்பதியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வளைவான பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த யானையை பார்த்து நிலை தடுமாறினர்.யானை அவர்களை விரட்டி மிக அருகில் வந்த நிலையில், உடனடியாக சுதாரித்து இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டி தப்பியுள்ளனர். யானையும் விடாமல் சிறிது தூரம் துரத்தியுள்ளது.இந்த காட்சியினை எதிரில் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நீலகிரி வயநாடு அருகே காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய தம்பதியர் appeared first on Dinakaran.

Read Entire Article