நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீகூர், சிங்காரா, தெங்குமரகடா பகுதிகளில் 36 புதிய நீர், நிலங்களில் வாழும் உயிரினங்களும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த வல்லுனர் குழுவினர் 3 நாட்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது பார்த்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினங்களில் 16 வகை உயிரினங்கள் அழிவின் பட்டியலில் உள்ளன.
The post நீலகிரி வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.