சென்னை: நீர்வளத்துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், சிறப்பு செயலாளர் ஸ்ரீதரன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன், நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர்கள், செயலாக்க பிரிவு தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், 2025-26ம் ஆண்டின் மானிய கோரிக்கையின் போது மேற்கொள்ளப்படவுள்ள புதிய நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், புதிய பாசன கட்டுமானங்கள், பாசன கட்டுமானங்களின் மறுசீரமைப்பு, ஏரிகள் தூர்வாருதல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மண்டலங்களில் உள்ள பாசன கால்வாய்கள் சிறப்பு தூர்வாருதல் மற்றும் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பாசன கட்டுமானங்களை விரைவில் சீரமைத்தல் குறித்தும் சட்ட மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நீர்வளத்துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்தும் பொறியாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
The post நீர்வளத்துறை தொடர்பான கோரிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை appeared first on Dinakaran.