சிறுதானியங்கள் இரண்டு போகம் சாகுபடி செய்யும் தண்ணீரில் நெல் ஒரு போகம்தான் சாகுபடி செய்ய முடியும். அந்தளவிற்கு நெல் சாகுபடி செய்ய தேவைப்படும் நீரை குறைத்து சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்ற ஆராய்ச்சியில், உலக நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட முறை தான் பானி பைப் அல்லது தமிழில் “வயல் தண்ணீர்க்குழாய்”.நெல் சாகுபடிக்கு வயல் முழுவதும் பயிாின் வளர்ச்சி காலம் முழுவதிற்கும் 5செமீ உயரம் தண்ணீர் கட்டப்படுகிறது. நெல் சாகுபடிக்கு தண்ணீர் தேவை இருந்தாலும் “காய்ச்சலும், பாய்ச்சலுமாக” இருந்தாலே போதும் என்று ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன. மேலும் நெல் வயல் முழுவதும் தண்ணீர் இருந்தால் வயலில் உள்ள உயரம் பொருட்கள் மக்கும் போது தண்ணீர் இருப்பதினால் காற்று இல்லாமல் இருப்பதினால் காிமிலவாயுவிற்கு பதில் மீத்தேன் வாயு வெளியாகிறது. மீத்தேன் வாயு பசுமைக்குடில் வாயு வகையினைச் சார்ந்தது மீத்தேன் வாயு 29 சதம் அதிக சூரிய சக்தியை பிடித்து வைப்பதினால் பூமி வெப்பமாகிறது. நெல்லில் நீர் மறைய நீர்க்கட்டு தொழில் நுட்பம் அறுகி வரும் நீர் வளத்தில் உணவு உற்பத்திக்கு உகந்த நுட்பம். பருவநிலை மாற்றத்திற்கும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நெல் நீர் இறைப்பிற்கான மின் சக்தி குறைக்கவும் உதவும் உன்னத நுட்பம். பயிாின் நீர் தேவையினை 30 சதம் குறைக்கலாம். இதனால் வறட்சி காலத்தில் குறைந்த நீரிலும் நெல் சாகுபடி செய்யலாம்.
இதற்கு தேவை என்ன?
“நீர் மறைய நீர்க் கட்டு” தொழில்நுட்பம் உலக நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கும் பல நாடுகளில் பாிசோதிக்கப்பட்டு பல நாடுகளில் இன்றளவும் விவசாயிகள் பின்பற்றி உணவு உற்பத்தியை அதிகரித்துள்ளார்கள். இதற்கு தேவை எளிமையான பொருட்கள் தான். 3 அங்குல விட்டம் மற்றும் 30 செமீ அளவுள்ள ஒரு பிளாஸ்டிக் பைப் அல்லது மூங்கில் குழாய். இதில் 15 செமீ உயரத்திற்கு 2 செமீ இடைவெளியில் துளைகள் இட வேண்டும். ஒவ்வொரு துளைக்கும் 2 செமீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இப்படி செய்யப்பட்ட வயல் தண்ணீர்க்குழாய் ஒரு வயலுக்கு 2 தேவை. இதனை இரண்டு வகையில் வயலில் நிறுவலாம். வயலினை நன்கு உழுது சமப்படுத்தியவுடன் வயலின் வரப்பு ஓரத்தில் 15 செமீ ஆழத்தில் மண்ணில் சொருகலாம். அல்லது நாற்று நட்டவுடன் ஓரிரு நாட்களில் வரப்பு ஓரத்தில் அடிக்கடி பார்ப்பதற்கு ஏதுவாக 15செமீ ஆழத்தில் சொருக வேண்டும். பின்னா் குழாயின் உள்ளே உள்ள மண் முழுவதும் எடுத்துவிட வேண்டும். வயலில் எந்த அளவு தண்ணீர் உள்ளதோ அதே அளவு குழாயிலும் தண்ணீர் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும். வயலில் பாசன நீர் குறையக் குறைய இந்தக் குழாயிலும் தண்ணீர் குறைய ஆரம்பிக்கும். வயலில் வெடிப்பு தோன்ற விடக்கூடாது. அதுவரை தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை, 15 செமீ ஆழத்தில் தண்ணீர் இருந்தாலும் பயிர் தண்ணீரை எடுத்துக்கொள்ளும்.களைகள் அதிகம் உள்ள வயலில் நீரை உடனே வடிக்காமல் களைகள் மறையும் வரையில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும். பின்னர் இந்த முறையினை பயன்படுத்தலாம். உரங்களை பயன்படுத்த விரும்பினால் தண்ணீரை வடித்துவிட்டு உரங்களை தெளித்துவிட்டு பின்னர் தண்ணீர் விடலாம். தூர் கட்டும் பருவம் வரை “நீர் மறைய நீர்க்கட்டு” நுட்பத்தினை பயன்படுத்தும்போது தூர்கள் நன்கு வெடிக்கும். பூக்கும் தருணம் வரை பயன்படுத்தலாம். பூக்கும் போதும் மண்பிடிக்கும் தண்ணீர் குறைவாக இருந்தால் மகசூல் பாதிக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் பயிரின் தண்ணீர் தேவை 25 சதம் குறைகிறது. தண்ணீர் எப்போதும் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருப்பதால் மண் வளம் கூடுகிறது. பயிரின் வேர்கள் கூடுதல் ஆழமாக சென்று சத்துக்களை உறிஞ்சி பயிர் ஆரோக்கியமாக வளருகிறது.
– வி.குணசேகரன்,
வேளாண்மை துணை இயக்குநா்,
தருமபுாி.
The post நீரைக் குறைத்து நெல்லைப் பெருக்க யோசனைகள்… appeared first on Dinakaran.