நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்த தம்பதி ஆஜர்!

9 hours ago 2

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு, குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், வழக்கின் எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்திட உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவு எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு வழக்குகளில் தலைமறைவாக இருந்த எதிரிகள் சுவாமிதாஸ் பாண்டியன் ஆ/வ.62 மற்றும் அவரது மனைவி மேரி ஜாக்குலின் பெ/வ.59 க/பெ.சுவாமிதாஸ் பாண்டியன் ஆகிய இருவரும் S Blue Metal Quarry என்ற தொழில் செய்ய வேண்டி பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து SBI Bank T.Nagar Branch-ல் ரூ.6,25,000/-ம், SBI Bank Adyar Branch-ல் ரூ.4,50,000/-ம் மற்றும் IOB Bank Mylapore Branch-ல் ரூ.10,00,000/-ம் ஆக மொத்தம் ரூ.20,75,000/- கடன் பெற்று கடன் தொகையை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.

இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாசுதேவன், பாரத ஸ்டேட் வங்கி தி.நகர் கிளை உதவி மேலாளர்கள் விமல் லெஸ்லி மற்றும் அடையாறு கிளை உதவி மேலாளர் பாலன் ஆகியோர் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எதிரிகளுக்கு எதிராக எழும்பூர், கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த வழக்குகளில் எதிரிகள் கடந்த 2 வருடங்களாக ஆஜராகாமல் இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், மேற்படி 2 எதிரிகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தலைமறைவாக இருந்து வந்த எதிரிகள் சுவாமிதாஸ் பாண்டியன் ஆ/வ.62 மற்றும் அவரது மனைவி மேரி ஜாக்குலின் பெ/வ.59 ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, தனிப்படை போலீசார் கடந்த 26.06.2025-ந் தேதி சூரப்பட்டில் வைத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்த தம்பதி ஆஜர்! appeared first on Dinakaran.

Read Entire Article