மின் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது

8 hours ago 4

ஆலந்தூர்: மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் புதிதாக 6 கடைகள் கட்டியுள்ளார். இதற்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு பெற மணப்பாக்கத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணபத்தினை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுக்க வந்த வணிக ஆய்வாளர் அண்ணாமலை ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து தினேஷ் ஊழல் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் தினேசுடன் சென்றனர். அப்போது வணிக ஆய்வாளர் அண்ணாமலை ரூ.15,000 பணத்தை பெற்றபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.

 

The post மின் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article