உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் கைது

13 hours ago 4

சென்னை: ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கில் கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேற்கு மாம்பலம் எல்ஐஜி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலையரசன் (23). ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியரான இவர், அசோக் நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்த தமிழரசி என்பவரை காதலித்து திருமணம் ெசய்து கொண்டார். திருமணம் நடந்த ஓராண்டிலேயே தமிழரசிக்கும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கலையரசன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கு, மனைவியுடன் வசிக்கும் 3 வயது மகனை சந்தித்து உணவு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது, தமிழரசியின் கள்ளக்காதலன் சரவணனுக்கும், கலையரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, தமிழரசி மற்றும் அவரது தாய் சந்தியா ஆகியோர் திட்டத்தின்படி, தகராறு ஏற்பட்ட சிறிது நேரத்தில் கலையரசனை, தமிழரசியின் சகோதரர்கள் உட்பட 3 பேர் வெட்டி கொலை செய்தனர்.இந்த வழக்கில் அசோக் நகர் போலீசார் கலையரசன் மனைவி தமிழரசி, அவரது சகோதரர்கள் சக்திவேல் (20), சஞ்சய் (19) மற்றும் நண்பர் சுனில்குமார், மாமியார் சந்தியா ஆகியோரை கைது செய்தனர்.ஆனால் இந்த கொலைக்கு முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் புளியந்தோப்பு சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் 15 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
புளியந்தோப்பு சரவணன் மீது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article