நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு

6 days ago 3

புவனேஸ்வர்,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் 'பிர்த்வி', 'ஆகாஷ்' மற்றும் 'அக்னி' உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சமீப காலமாக நீண்டதூர ஹைபர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அடுத்த தலைமுறை உபகரணங்களை தயாரிப்பதில் தற்போது டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 1,500 கி.மீ. தூரம் இலக்கை சென்று தாக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரை அருகே உள்ள சோதனை தளத்தில் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஏவுகணை வளாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. இன்று மூத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

India has achieved a major milestone by successfully conducting flight trial of long range hypersonic missile from Dr APJ Abdul Kalam Island, off-the-coast of Odisha. This is a historic moment and this significant achievement has put our country in the group of select nations… pic.twitter.com/jZzdTwIF6w

— Rajnath Singh (@rajnathsingh) November 17, 2024
Read Entire Article