
திருவனந்தபுரம்,
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அந்த படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் அவர் நடித்திருப்பார்.
நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் இவர் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில், தன்னுடன் படித்த நண்பரை 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அபிநயாவுக்கு நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மோதிரம் மாற்றிய பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநயா பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.