'ராபின்ஹுட்'- கெட்டிகா ஷர்மா நடனமாடிய சிறப்பு பாடலின் புரோமோ வெளியீடு

3 hours ago 1

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' மற்றும் 2-வது பாடலான 'வாட்டெவர் யூ கோ' சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடியுள்ளார்.

A 'Nasha' filled surprise ft. @TheKetikaSharma ❤️❤️#Robinhood third single #AdhiDhaSurprisu promo out now!▶️ https://t.co/u6QvU0yNWmFull song out today at 5.04 PM A @gvprakash musical.Lyrics by Academy Award Winner @boselyricistChoreography by @OfficialSekharpic.twitter.com/8peevIOEjZ

— Mythri Movie Makers (@MythriOfficial) March 10, 2025
Read Entire Article