சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி; சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

3 hours ago 1

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது. முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியின் சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு இந்த விருதை பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பி.சி.சி.ஐ) தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


| | #Final

For one final time in the #ChampionsTrophy

The winner of the fielding medal goes to

WATCH #TeamIndia | #INDvNZ

— BCCI (@BCCI) March 10, 2025

Read Entire Article