நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 weeks ago 5

சென்னை: எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். நீட் தேர்வு மாணவி அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2017ல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட போது தாங்க முடியாத வேதனைக்கு ஆளானோம். நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது.

2019ம் ஆண்டு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை தொடங்கினோம். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவர்களை பார்க்கும்போது எனக்கு ஒரு உத்வேகம் வந்துவிடும். எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரல் தொடரும். ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு தான் விளங்குகிறது

ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். எஞ்சிய வாக்குறுதிகளையும் வரும் காலத்தில் உறுதியாக விரைவாக நிறைவேற்றுவோம்.

பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்றன. தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது.

புதிய திட்டங்களை தொடங்கி வைக்க நாளை கோவை செல்கிறேன். கோவையில் என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது என்பதை ஆய்வு செய்ய போகிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேவையில்லாமல் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்வது தான் என்று கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

The post நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article