நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை விஜய் அறிந்துள்ளாரா? - திருமாவளவன் கேள்வி

5 months ago 23

சென்னை,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை விஜய் அறிந்துள்ளரா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொதுவான பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தாமாக முடிவுகளை எடுத்து மாநில அரசுகளை புறம் தள்ளி வருகிறது. தேர்தல் நேரத்தில் நீட் தேர்வுகளை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை.

நீட் தேர்வு ரத்துக்கு முட்டுக்கட்டையாக, தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை த.வெ.க. தலைவர் விஜய் அறிந்துள்ளாரா என்று தெரியவில்லை. அவர் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை, தன்னுடைய கடமையை செய்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article