நீடாமங்கலம், மே 8: நீடாமங்கலம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி திருவிழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மண்டபத் தெருவில் உள்ள புனித செபஸ்யார் ஆலய தேர் பவனி திருவிழா நடந்தது. கடந்த 22ம் தேதி மாலை 7 மணி அளவில் நீடாமங்கலம் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், கோயிலில் கொடியேற்ற கூட்டு திருப்பலியுடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து புனித செபஸ்டியாரின் திருவுருவம் தாங்கிய தேர் புனிதம் செய்யப்பட்டு மின் அலங்காரத்துடன் வானவேடிக்கைகளோடும் கிளாரினெட் இன்னிசை நிகழ்ச்சியுடனும் புனித செபஸ்டியாரின் திருஉருவம் தாங்கிய தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு திருவிழா பாடல் கூட்டு திருப்பலி பங்குத்தந்தையரால் நிறைவேற்றப்பட்டு இறைமக்கள் முன்னிலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை நீடாமங்கலம் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், புனிதசெபஸ்டியார் ஆலய கிராம மக்கள் மண்டபத் தெருஆலய மக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
The post நீடாமங்கலத்தில் செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா appeared first on Dinakaran.