"நிழற்குடை" ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 hours ago 2

சென்னை,

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் நிழற்குடை திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் "பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள். நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் தொட்டாசினுங்கி, அந்த படத்தில் தேவயானி கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் நிழற்குடை யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தமிழ் நாடு புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது.

#kannekanmaniye from today at 7 PM ! A @narenbalakumar Musical Lyricist @padsriram Singer @singersaindhavi ✨️ #nizharkudai #devayani @Massaudios pic.twitter.com/G6Hvu5nJaR

— dharshanfilms (@dharshanfilms) April 24, 2025
Read Entire Article