'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 3-வது பாடல் அப்டேட்

3 hours ago 2

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காதல் பெயில்' என்ற பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

இந்த நிலையில் 3-வது பாடலின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, 3-வது பாடலான 'ஏடி' என்ற பாடல் நாளை (20-ந் தேதி) வெளியாக உள்ளது. ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் வெளியிடும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது.

#Neek 3rd single #yedi written by @Lyricist_Vivek pic.twitter.com/jxyQ356pWp

— Dhanush (@dhanushkraja) December 18, 2024
Read Entire Article