நியூயார்க் பாலத்தில் கடற்படைக் கப்பல் மோதி விபத்து: 2 பேர் பலி, 22 பேர் காயம்

4 hours ago 2

நியூ யார்க்: நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் கப்பல் மாலுமிகள் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர். நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆறு வழியாக மெக்சிகோ கடற்படை கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது புரூக்ளின் பாலத்தின் மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். குவாவுத்தேஹ்மொக் என்ற பெயருள்ள அந்த கப்பலில் மொத்தம் 277பேர் இருந்தனர். இந்தக் கப்பல், மாலுமிகளுக்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

குவாவுத்தேஹ்மொக் கப்பல் கடந்த மாதம் 6ம் தேதி தனது பயணத்தை துவக்கியது. இந்த கப்பல் 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 142 ஆண்டு பழைமையான புரூக்ளின் பாலம் கடுமையாக சேதமடையவில்லை. கப்பல் பாலத்தில் மோதியபோது கப்பலின் கொடிக்கம்பங்கள் முறிந்ததை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

The post நியூயார்க் பாலத்தில் கடற்படைக் கப்பல் மோதி விபத்து: 2 பேர் பலி, 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article