நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: தோல்விக்குப்பின் பாக்.கேப்டன் கூறியது என்ன..?

6 hours ago 5

கிறிஸ்ட்சர்ச்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 91 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 92 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிம் ஷெப்பர்ட் 44 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில், "இது கடினமாக இருந்தது. நாங்கள் இலக்கை அடையவில்லை. அவர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினர். பிட்ச்சில் கொஞ்சம் வேகம் இருந்தது. நாங்கள் அனைவரும் அடுத்த ஆட்டத்தைப் பற்றி யோசிப்போம். எங்களிடம் மூன்று புதுமுக வீரர்கள் இருந்தனர், அவர்கள் அதிக போட்டிகளில் விளையாடினால் மேலும் கற்றுக்கொள்வார்கள். நியூசிலாந்தில் புதிய பந்து சிறப்பாக செல்கிறது. எங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்" என்று கூறினார். 

Read Entire Article