நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன..?

3 months ago 21

துபாய்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (44.44 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து (43.06 சதவீதம்) 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (34.38 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.


New Zealand's win in first #INDvNZ Test shakes up the #WTC25 standings

More ➡️ https://t.co/aGNt1GAOJA pic.twitter.com/FmuwwDwTyZ

— ICC (@ICC) October 20, 2024

Read Entire Article