நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தடுமாறும் இந்தியா

2 months ago 14

மும்பை,

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டேரில் மிச்சேல் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 18 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும் அவுட் ஆகினர். இந்தியா 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க பந்து வீச்சாளரான முகமது சிராஜ் களமிறக்கப்பட்டார். அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. சுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியா 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 4 நாட்கள் ஆட்டம் உள்ள நிலையில் நாளை இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Read Entire Article