
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதனால் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.