சென்னை: தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தெலங்கானா நிறைவேற்றியுள்ள தீர்மானம் நமது கூட்டு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறியுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தெலங்கானா மாநிலச் சட்டமன்றத்தில், “நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சியியல் உணர்வை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தெலங்கானா நிறைவேற்றியுள்ள இத்தீர்மானம் நமது ஜனநாயகத்தின் சமநிலையைக் குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் வகையில், நமது கூட்டு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இது வெறும் தொடக்கம் மட்டுமே! நியாயமான மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், மேலும் பல மாநிலங்கள் நம்மோடு இணைவார்கள். இவ்வாறு எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தி தெலங்கானாவின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: முதல்வர் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.