ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களின் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனந்த்நாக் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறையுடன் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 95967 77669, 091322 25870 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அனந்த்நாக் காவல்துறை தெரிவித்துள்ளது. 94190 51940 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முதற்கட்டமாக 16 பேரின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. 1.மஞ்சுநாத் (கர்நாடகா), 2.வினய் நர்வால் (ஹரியானா) 3.சுபம் திவேதி (உ.பி.) 4.திலீப் ஜெயராம். 5.சந்தீப் (நேபால்), 6.பிடன் அதிகேரி, 7.உத்வானி பிரதீப் (அமீரகம்) 8.அதுல் ஸ்ரீகாந்த் (மராட்டியம்). 9.சஞ்சய், 10. சையது உசேன் (காஷ்மீர்), 11.ஹிமத் (சூரத்), 12.பிரசாந்த் குமார், 13.மணீஷ் ரஞ்சன். 14.ராமச்சந்திரம், 15. ஷாலிந்தர், 16. ஷிவம் மோகா (கர்நாடகா) ஆகியோர் உயிரிழப்பு என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. மருத்துவர் பரமேஸ்வரன் (31) (சென்னை), சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்வு! appeared first on Dinakaran.