நின்ற கார் மீது லாரி மோதி விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

1 day ago 3

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்று கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துகுள்ளானது. இதில் காரின் முன் பக்கம் அப்பலம் போல நொருங்கியது.

காரில் இருந்த மதுரையை சேர்ந்த அய்யனார், ஓட்டுநர் சரவணன் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article