நித்யா மேனன் நடித்த எந்த படங்களையும் பார்த்ததில்லை - இயக்குனர் மிஷ்கின்

4 months ago 13

சென்னை,

இயக்குனர் மிஷ்கின் "சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன்" போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 'நத்தலால' என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'டிரெய்ன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் நேற்று வெளியான வணங்கான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் நித்யா மேனன் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய மிஸ்கின் "நான் இதுவரை நித்யா மேனன் நடித்த எந்த படத்தையும் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

அதுபோல விஷாலின் எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மேலும் உதயநிதி ஸ்டாலினின் எந்த படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் அவருடனும் பணியாற்றி இருக்கிறேன். அது மாதிரி தான் விஜய் சேதுபதியின் விவசாயி மற்றும் மாமனிதன் படத்தை மட்டும் தான் பார்த்தேன். இதுதான் என்னுடைய சீக்ரெட்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article