நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு 108 காய்கறிகளில் அலங்காரம்

2 days ago 2

ராசிபுரம், ஜன. 30: ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு, தை மாதம் காய்கறி அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் 17வது ஆண்டாக நேற்று நித்ய சுமங்கலி மாரியம்மனுக்கு காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் வழங்கிய முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பீர்க்கங்காய், முள்ளங்கி, கீரை வகைகள் போன்ற ஒரு டன் எடை உள்ள 108 வகையான காய்கறிகள் பயன்படுத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காய்கறி அலங்காரத்தை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு 108 காய்கறிகளில் அலங்காரம் appeared first on Dinakaran.

Read Entire Article