திருச்செங்கோடு, பிப்.1:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்திற்கு 37 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில், முதல் தரம் ₹126.15 முதல் ₹149 வரையிலும், இரண்டாம் தரம் ₹110.25 முதல் ₹115.25 வரை, ₹1.86 லட்சத்திற்கு விற்பனையானது. இதேபோல், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 39 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ₹130.90 முதல் ₹142.90 வரையிலும், இரண்டாம் தரம் ₹98.80 முதல் ₹106.70 வரை, ₹1.50 லட்சத்துக்கு விற்பனையானது.
The post ₹1.86 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.