‘கர்நாடகா கட்டிய 3 அணைகளை ஒன்றிய அரசு இடிக்க வேண்டும்’

3 hours ago 1

நாகப்பட்டினம்: கள் இறக்க அனுமதி வழங்க கோரி நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை கருதி உபரிநீரை மட்டுமே தருகிறது. தமிழ்நாட்டின் உரிமை நீரை தருவது இல்லை.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 அணைகளை கட்டியுள்ளது. டெல்லியில் அனுமதி பெறாமல் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பை நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தள்ளப்பட்டது. அதுபோல் கர்நாடக அரசு அனுமதி பெறாமல் கட்டியுள்ள 3 அணைகளை ஒன்றிய அரசு இடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘கர்நாடகா கட்டிய 3 அணைகளை ஒன்றிய அரசு இடிக்க வேண்டும்’ appeared first on Dinakaran.

Read Entire Article