நாளை வெளியாகும் ரெட்ரோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

2 hours ago 1

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியாகி வைரலானது. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' என்ற பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

A little pill from the Love Drug...❤️Can't wait for u all to listen to the magic @Music_Santhosh and @Lyricist_Vivek have created. #KannadiPoove 1st single from #Retro dropping tomorrow at 5pm #RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/oSV5Jg9dQb

— karthik subbaraj (@karthiksubbaraj) February 12, 2025
Read Entire Article