சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியாகும் 'எஸ்கே 23' படத்தின் அப்டேட்

3 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்திற்கு 'சிங்க நடை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளது.

 

Read Entire Article