அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன் பேச்சு

3 hours ago 1

ஈரோடு,

ஈரோட்டி உள்ள கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர்கள் பெயர் இல்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள்.

நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்.ஜி.ஆர். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும்தான். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது என்றார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வழக்கத்தை விட சரிசமமாக இருந்த இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் புகைப்படங்கள் நிர்வாகிகள், தொண்டர்களிடையே சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article