நாளை வெளியாகும் 'பசூக்கா' படத்தின் பிரீ ரிலீஸ் டிரெய்லர்

1 week ago 7

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனை தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள பசூக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணி அளவில் பிரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

#Bazooka Pre Release Teaser Releasing Tomorrow at 10 AM IST pic.twitter.com/oHV9FItcJM

— Mammootty (@mammukka) April 8, 2025
Read Entire Article