அமைச்சர் இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்து; பக்தர்கள் அதிர்ச்சி

5 hours ago 2

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்களுடன் அமைச்சர் சிவசங்கர் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. வடம் பிடித்து இழுத்த தேரின் அச்சு முறிந்து மற்றொரு தேரின் மீது சாய்ந்ததால், நல்வாய்ப்பாகப் பக்தர்கள் காயமின்றி தப்பினர்.

அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில், சரிந்த தேரிலிருந்து பொக்லின் உதவியோடு சுவாமி சிலைகளை மீட்டனர். சம்பவத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழா வன்னம் அமைச்சர் சிவசங்கர் அந்த இடத்திலிருந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உற்சர் ஸ்ரீ அய்யனார் சிலையை மற்றொரு தேருக்கு இடம்மாற்றி தேரை இருக்க ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில்பாளையம் தேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த பழைய தேர் என்பதால் மரத்தாலான அச்சு பாரம் தாங்காது முறிந்து விட்டதாக அறநிலை துரை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அமைச்சர் பங்கேற்ற கோயில் விழாவில் தேர் அச்சு முறிந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read Entire Article