
வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக கடுமையாக உள்ளது. ஏப்ரல் - மே மாத வெயில் போல மக்களை வாட்டி வதைத்து வருகிறது வெப்பம். சென்னையிலும் அதே நிலைதான் உள்ளது. எனினும், பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் மழை குளிர்ச்சியை தந்தது. அந்த வகையில் தமிழகத்தின் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதன் விவரம் வருமாறு:-
* மதுரை விமான நிலையம் - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்)
* மதுரை நகரம் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
* சென்னை மீனம்பாக்கம் - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)
* சென்னை நுங்கம்பாக்கம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
* தூத்துக்குடி - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
* நாகப்பட்டினம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)
* வேலூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)
* ஈரோடு - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
* திருத்தணி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
* கடலூர் - 100.58 டிகிரி (38.4 செல்சியஸ்)
* திருச்சி - 100.58 டிகிரி (38.4 செல்சியஸ்)
* கரூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
* தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
எச்சரிக்கை
மேலும், அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.