நாளை வெளியாகும் 'சப்தம்' படத்தின் இரண்டாவது பாடல்

4 months ago 11

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து 'சபதம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

இந்த படத்தில் ஆதி, ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பேய்களை பற்றி தெரிந்துகொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார். இதில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படம் வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது. 

This one , out of box in my films but most wanted for #Sabdham & my favourite too … get ready all.. @AadhiOfficial @MusicThaman @7GFilmsSiva pic.twitter.com/cEiqVXI9NV

— Arivazhagan (@dirarivazhagan) February 22, 2025
Read Entire Article