நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என அறிவிப்பு

4 days ago 3

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது . வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பெஞ்சல் புயல் காரணமாக இன்று பூங்கா செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Read Entire Article