
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் அறிவது Controller of Defence Accounts, Chennai அலுவலகத்திலிருந்து ராணுவ ஓய்வூதியம் மற்றும் ராணுவ குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்புடைய குறைகளை சரிசெய்வதற்காக SPARSH Outreach Programme நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக SPARSH Mobile Van ஒன்று சம்மந்தப்பட்ட பணியாளர் குழுவினருடன் 5.7.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டியிலும், 7.7.2025 அன்று தூத்துக்குடியிலும் முகாமிடவுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொண்டு ராணுவ ஓய்வூதியம் மற்றும் ராணுவ குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளை களைந்திடும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் படைப்பணி சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை(PPO), ஆதார் அட்டை மற்றும் PAN அட்டை ஆகிய ஆவணங்களின் அசலுடன் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை ராணுவ ஓய்வூதியம் மற்றும் ராணுவ குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2902025 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.