நாளை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு கால்பந்து போட்டி நடக்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம்

1 month ago 11

சென்னை: நாளை(மார்ச் 30) சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு கால்பந்து போட்டி நடக்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிகையில்;

30.03.2025 அன்று, ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் 19.00 மணிக்கு (பிரேசில் லெஜண்ட்ஸ் Vs இந்தியா லெஜண்டஸ்) கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியினை காண 20,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் போட்டி நடைபெறும் நாளன்று மதியம் 15.00 மணி முதல் இரவு 23.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/ வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. வாகன நிறுத்தத்திற்கான இடம் குறைவாக இருப்பதால் பார்வையாளர்கள் பொது போக்குவரத்துகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், புறநகர் இரயில்கள் மற்றும் மாநகர போக்குவரத்துகளை பயன்படுத்தி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள விளையாட்டு மைதானத்தை நடந்து அடையலாம், வி.பி பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வழியாக மைதானத்தை அடையலாம். பார்வையாளர்கள் இராஜாமுத்தையா சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
2. சென்ட்ரல் இரயில் நிலைய மார்க்கமாக கார்/பைக்குகளில் வரும் பார்வையாளர்கள் பார்க் சாலையில் (விக்டோரியா ஹால் சாலை) வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான “பி” மைதானம் மற்றும் “சி” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.
3. இராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் ஈ.வி.ஆர் சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை, டவுட்டன், நாரயாணகுரு சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
4. எழும்பூர் இரயில் நிலைய மார்க்கமாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் நேராக சென்ட்ரல் இரயில் நிலையத்தை நோக்கிச் சென்று, பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான “பி” மைதானம் மற்றும் “சி” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.
5. அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படுவார்கள்.
6. மேலும், அதிக போக்குவரத்து நெரிசலின் போது ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
7. சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் போட்டியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

The post நாளை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு கால்பந்து போட்டி நடக்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article